உலகம்

சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே அமைதியின்மைக்கு முக்கியக் காரணம் – தைவான் அதிருப்தி!

  • May 19, 2026
  • 0 Comments

சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே பிராந்தியத்தில் அமைதியின்மை மற்றும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று தைவானின் பிரதமர் சோ ஜுங்-டாய் (Cho Jung-tai ) தெரிவித்துள்ளார். சீனக் கடற்படை பயிற்சிக்காக ஒரு விமானம் தாங்கி கப்பல் படையை மேற்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சீன மக்கள் குடியரசு, தைவான் ஜலசந்திப் பகுதி, இந்தோ-பசிபிக் பகுதி, தென் சீனக் கடல் மற்றும் ஜப்பானைச் […]

உலகம் செய்தி

சென்னை அணியின் play-off சுற்று வாய்ப்பு கேள்விக்குறி!

  • May 19, 2026
  • 0 Comments

ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 63-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றது. டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். கார்த்திக் சர்மா 32 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 27 ஓட்டங்களையும் […]

உலகம்

வனுவாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 19, 2026
  • 0 Comments

வனுவாட்டு தீவுகளில் 06 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.  

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய அமெரிக்கா!! ட்ரம்பின் புதிய நகர்வு!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் வொஷிங்டனுக்கு  சமாதானத் திட்டமொன்ற அனுப்பியதை தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு புதிய சமாதானத் திட்டத்தை அனுப்பிய பிறகு, ”  ஈரான் மீதான தாக்குதலை நாங்கள் நடத்த மாட்டோம். ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ஒரு நொடிப் பொழுதில் ஈரான் […]

அரசியல் இலங்கை செய்தி

“தமிழ் டயஸ்போராக்களுக்காகவே மஹிந்த குறிவைப்பு” – குமுறுகிறார் தேரர்!

  • May 19, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குகொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச விடயத்தில், தமிழ் டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே அரசாங்கம் செயல்படுகின்றது என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவை சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” தீவிரவாதத்துக்கு முடிவு கட்டி இந்நாட்டுக்காக மஹிந்த ராஜபக்ச ஆற்றிய சேவை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனினும், மஹிந்த விடயத்தில் டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே தற்போதைய […]

இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!! காரணம் என்ன?

  • May 19, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே ரூபாய் சரிவடைவதற்கு முக்கிய காரணம் என மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 330 ரூபாவை கடந்துள்ள நிலையில், இது  தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், […]

உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ தாக்குதல் திட்டத்தை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவருகின்றது. மறுபுறத்தில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துவருகின்றது. இந்நிலையில் அமைதி பேச்சு முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

துருக்கியில் நபர் ஒருவரின் அட்டகாசம் – 06 பேர் கொலை! பொலிஸார் வலைவீச்சு!!

  • May 19, 2026
  • 0 Comments

துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரி மெர்சின் மாகாணத்தில் உள்ள டார்சஸ் நகரின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியப் பின்னர் தலைமறைவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

அமெரிக்காவின் மிகப் பெரிய மசூதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள மிகப்பெரிய மசூதியில், நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 11.53 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பாதுகாவலர் உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் உடல்கள், மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். […]

ஐரோப்பா

பாதுகாப்பை மேம்படுத்த ஜெர்மனி இலக்கு – 10 பில்லியன் ஒதுக்கீடு!

  • May 18, 2026
  • 0 Comments

ஜெர்மனி பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் (£8.5 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது. அவசரநிலைகள் மற்றும் சாத்தியமான தாக்குதல்களுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதற்காக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய முழு அளவிலான படையெடுப்பிற்குப் பதிலளிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட ஒரு பரந்த இராணுவச் செலவின இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது பெருமளவிலான உயிரிழப்புகளுக்கான மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், 1,000 சிறப்பு வாகனங்கள் மற்றும் 110,000 […]