உலகம்

அமெரிக்காவின் மிகப் பெரிய மசூதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள மிகப்பெரிய மசூதியில், நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 11.53 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பாதுகாவலர் உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் உடல்கள், மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் அபாயகரமான சூழ்நிலை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் கூறுகிறார்.

இந்த விவகாரத்தை தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!