ஈரான்மீதான ராணுவ தாக்குதல் திட்டத்தை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!
ஈரான்மீதான அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவருகின்றது.
மறுபுறத்தில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துவருகின்றது.
இந்நிலையில் அமைதி பேச்சு முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.





