சென்னை அணியின் play-off சுற்று வாய்ப்பு கேள்விக்குறி!
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 63-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றது.
டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
கார்த்திக் சர்மா 32 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹைதராபாத் தரப்பில் அதிரடியாகப் பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு, ஆரம்பத்தில் அபிஷேக் சர்மா (26) மற்றும் டிராவிஸ் ஹெட் ஏமாற்றம் அளித்தாலும், இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஜோடி ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றியது.
இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களைக் குவித்தார்.
அவருக்குப் பக்கபலமாக நின்ற ஹென்ரிச் கிளாசன் 26 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றவேளை ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே-ஆஃப் சுற்றுக்கான தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் சிக்கலாகியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தப் பெரிய வெற்றியின் மூலம் தங்களது play-off வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.





