இலங்கை

திரைப்படப் பாணியில் போதைப்பொருள் கடத்தல் – சாரதி திடீர் மரணம்!

  • June 10, 2026
  • 0 Comments

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்தின்  சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த போதைப்பொருள்  வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால்  அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைககள் தெரிவிக்கின்றன. ஓகவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்தள்ளது. கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே சாரதி திடீர் சுகவீனமுற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

இந்தியா செய்தி

காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் , காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் […]

ஐரோப்பா

மொஸ்கோவின் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – முக்கிய தலைவர் படுகொலை!!

  • June 10, 2026
  • 0 Comments

மொஸ்கோவின் பாலாஷிகாவில் (Balashikha)  நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைப் பிரிவின் தலைவர் டமிர் டேவிடோவ் (Damir Davydov)  கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மொஸ்கோவின் வெவ்வேறு பககுதிகளில் இன்று இரண்டு கார்குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமீபகாலமாக உக்ரைன் எல்லை பகுதிகளை தாண்டி மொஸ்கோவை குறிவைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21வது முறையாகத் தடைகளை விதிக்கும் […]

அரசியல் செய்தி

முடிவுக்கு வந்தது எதிரணியின் சத்தியாக்கிரகம்!

  • June 10, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்காக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், சுரேஷ் சலேவுக்கு நீதி கோரியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது. முன்னாள் அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, டிரான் அலஸ் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை […]

ஐரோப்பா

பெல்ஃபாஸ்ட் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

பெல்ஃபாஸ்டில் (Belfast) வன்முறை வெடிப்பதற்கு காரணமான சூடான் நாட்டு புகலிடக் கோரிக்கையாளரான ஹாடி அலோடிட்   இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஹாடி அலோடிட் மீது கொலை முயற்சி, NHS கதிரியக்க நிபுணரைக் கொல்ல அச்சுறுத்தல், மற்றும் கத்தி வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அலோடிட்டிற்கு பிணை வழங்கப்பட்டால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் கலவரம் மற்றும் வன்முறை […]

அரசியல் இலங்கை செய்தி

தகவல்களை மறைக்கும் சுரேஷ் சலே: கோட்டாவுக்கு எதிரான தடையால் குழப்பத்தில்!

  • June 10, 2026
  • 0 Comments

” சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுப்பு காவலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என வெளியாகும் தகவல்களையும் அவர் அடியோடு நிராகரித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியவை வருமாறு , “தடுப்பு காவலில் இருக்கும் சந்தேக நபரொருவருக்கு வழங்கப்படும் அத்தனை உரிமைகளும் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் அட்டூழியம்: 13 பேர் பலி!

  • June 10, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானின் Tyre மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். Tirdaba , Deir Qanoun மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒன்பது வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Tyre நகரத்தில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திர்தாபா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் […]

இலங்கை

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் விசாரணை செய்ய வேண்டும்- ரவூப் ஹக்கீம்!

  • June 10, 2026
  • 0 Comments

ரோஹோன விஜேவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறிள்ளார். இதன்போது மேலும் தெரிவத்த அவர்,   பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்  வலியுறுத்தியுள்ளார்.  

உலகம்

பிலிப்பைன்ஸில் 2,100இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவு – 17 பேர் மாயம்!

  • June 10, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து 2,100-க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக 600இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் 17 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் 3,100-க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் 100 அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் […]

இலங்கை செய்தி

SriLankan Airlines நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக திமால் அரந்தர Dimal Arandara அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் தற்காலிகத் தலைவராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நிரந்தரப் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தப் புதிய பதவிக்கு முன்னதாக, அவர் திறைசேரியின் பிரதிநிதியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்துள்ளார்.