தெற்கு லெபனானில் இஸ்ரேல் அட்டூழியம்: 13 பேர் பலி!
தெற்கு லெபனானின் Tyre மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
Tirdaba , Deir Qanoun மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒன்பது வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Tyre நகரத்தில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திர்தாபா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தப் பாதிப்புகள் அப்பகுதியில் நிலவும் கடுமையான போர் சூழலை வெளிப்படுத்துகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





