SriLankan Airlines நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக திமால் அரந்தர Dimal Arandara அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் தற்காலிகத் தலைவராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நிரந்தரப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்தப் புதிய பதவிக்கு முன்னதாக, அவர் திறைசேரியின் பிரதிநிதியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்துள்ளார்.





