ஐரோப்பா

கணித கங்காரு போட்டி – ஜெர்மனியில் வசிக்கும் சிரிய மாணவர் சாதனை

  • June 20, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய கணிதப் போட்டிகளில் ஒன்றான ‘கணித கங்காரு’  ( Mathematical Kangaroo) போட்டியில்  ஜெர்மனியில் வசிக்கும் 16 வயதுடைய  சிரிய மாணவரான பிலால் கிரெய்டி (Bilal Kreidi), தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள 12,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 881,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த சாதனையைத் தொடர்ந்து பிலால்   கல்வி சார்ந்த டிக்டொக் சேனல் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதில், ஐந்தாம் வகுப்பு முதல் மேல்நிலைப் பாடசாலை வரை […]

தமிழக பாஜக தலைவரும் சிறிதரன் எம்.பி. சந்திப்பு இலங்கை செய்தி

தமிழக பாஜக தலைவரும் சிறீதரன் எம்.பி. சந்திப்பு

  • June 20, 2026
  • 0 Comments

மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான குழுவினரை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, ஈழத் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் சமகால அரசியல் சவால்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் […]

உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 07 பேர் பலி

  • June 20, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்விரு சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குண்டு வாகனம் ஒன்றில் இருந்து வெடித்ததாகவும், இரண்டாவது குண்டு ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு குண்டுவெடிப்புகளும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதல் குண்டுவெடிப்பில் ஐந்து பேரும், இரண்டாவது குண்டுவெடிப்பில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதுடன், மேலும மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை – 41 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்

  • June 20, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் பரவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரக்கால நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அவசரக்கால கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் வெப்பநிலை சாதனை அளவை நோக்கி உயர்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 2003 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெப்ப நிகழ்வுகளுக்கு ஒப்பாக, இந்த வெப்பம் அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று தேசிய […]

உலகம்

நிரந்தர அமைதி ஒப்பந்தம் – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

  • June 20, 2026
  • 0 Comments

நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு இணங்கத் தவறினால், “அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காத” நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பெஞ்சமின் நெதன்யாகு சீர்குலைக்க முயற்சிக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.    

உலகம்

லிபியாவின் கிழக்கு கடற் பகுதியில் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு

  • June 20, 2026
  • 0 Comments

லிபியாவின் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் 15 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. 

இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 A சித்தி

  • June 20, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 70.1 சதவீதமான மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றுள்ளனர். அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண […]

உலகம்

50 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் விசா கட்டணம் உயர்வு

  • June 20, 2026
  • 0 Comments

ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு ஜப்பான் அரசாங்கம்   வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய விசா கட்டணங்கள் வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டண அமைப்பின் கீழ், ஒற்றை நுழைவு விசாவின் கட்டணம் 3,000 ஜப்பானிய யென்னிலிருந்து 15,000 ஜப்பானிய யென்னாகவும், பல நுழைவு விசாவின் கட்டணம் 6,000 ஜப்பானிய யென்னிலிருந்து 30,000 ஜப்பானிய யென்னாகவும் […]

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து, சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச நிபுணத்துவம் அவசியம்

  • June 20, 2026
  • 0 Comments

” யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் எம்.பி., நோர்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார். இலங்கையின் […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் நீதி அமைச்சர் யாழில் சந்திப்பு நடத்தினார். இலங்கை செய்தி

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் நீதி அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று (20) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தனர். இந்தச் சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான அவசர தேவைப்பாடுகள் மற்றும் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கை […]