உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 07 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்விரு சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் குண்டு வாகனம் ஒன்றில் இருந்து வெடித்ததாகவும், இரண்டாவது குண்டு ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு குண்டுவெடிப்புகளும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முதல் குண்டுவெடிப்பில் ஐந்து பேரும், இரண்டாவது குண்டுவெடிப்பில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதுடன், மேலும மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்