உலகம்

லிபியாவின் கிழக்கு கடற் பகுதியில் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு

லிபியாவின் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் 15 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

அவர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து இந்த உடல்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என கடற்படை வட்டாரம் நம்புகிறது.

குறித்த படகில் சுமார் 61 பேர் பயணித்ததாக உயிர் பிழைத்த 10 பேர் தெரிவித்துள்ளனர்.

எகிப்திய எல்லைக்கு அருகிலுள்ள டோப்ருக் (Tobruk)  நகரின் கடற்கரையோரம்  இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், இன்னும் பல உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு இடைவழிப் பாதையாக லிபியா மாறியுள்ளது. அவர்கள் பாலைவனம் மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பாதைகளைக் கடந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்