செய்தி விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை அணி!

  • June 4, 2026
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது. குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க […]

உலகம்

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள அமண்டா புயல் தொடர்பில் அறிவுறுத்தல்!

  • June 3, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் அமண்டா (Amanda) எனப் பெயரிடப்பட்ட வெப்பமண்டல புயல் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியா தீபகற்பத்திற்கு மேற்கே சுமார் 1,475 மைல் தொலைவில் இந்தப் புயல் நிலைக்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்தப் பருவத்தின் முதல் வெப்பமண்டல சூறாவளியாகும். புயலின் தற்போதைய காற்றின் வேகம் மணிக்கு 40 மைல் ஆகும். அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் வலுப்பெற்று, வார இறுதியில் பலவீனமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.    

இலங்கை முக்கிய செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத்தில் பாரிய தீவிபத்து – எரிகாயங்களுடன் பலரின் உடல்கள் காணப்படுவதாக தகவல்!

  • June 3, 2026
  • 0 Comments

ஹொரணை – பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 55 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் 11 பேர் காணாமல்போயுள்ளதாகவும், எரிந்த நிலையில் பலரின் உடல்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பா

ரஷ்யாவில் குவிந்த முதலீட்டாளர்கள் : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் தாக்குதல்!

  • June 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்  ( St Petersburg) புறநகர்ப் பகுதிகளில் உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 130 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகை தந்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 59 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் […]

உலகம்

கலிபோர்னியாவில் பணயக்கைதிகளை மீட்க சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

  • June 3, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்டில் (Bakersfield) உள்ள ஒரு கட்டிடத்தில் பணயக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்த நபர், FBI அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சேஸ் வங்கி கிளை அமைந்துள்ள பகுதிக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற அழைப்பை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இதன்போது சந்தேகநபர் பணயக்கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. பிடித்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருந்தார். ஏனையோரை மீட்க பொலிஸார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இந்நிலையில் FBI அதிகாரிகள் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

செய்தி விளையாட்டு

2026 FIFA World cup: ஈரான் வீரர்களுக்கு கிடைத்தது விசா!

  • June 3, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, ஈரானிய தேசிய அணி வீரர்களுக்கும் , ஊழியர்களுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மெக்சிகோ விசா வழங்கியுள்ளதை, துருக்கிக்கான ஈரான் தூதுவர் Mohammad-Hassan Habibollahzadeh உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான போர் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரான் தனது பயிற்சி முகாமினை அரிசோனாவிலிருந்து மெக்சிகோ எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்கு மாற்றியுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் தனது குழுநிலை ஆட்டங்களை அமெரிக்காவில் விளையாட […]

ஐரோப்பா

இத்தாலியில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!!! இருவர் கைது!

  • June 3, 2026
  • 0 Comments

இத்தாலியில் நான்கு புலம்பெயர்ந்தோர் காருக்குள் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து மூன்று ஆப்கானியர்களும் பாகிஸ்தான் நபர் ஒருவரும் காரினுள் வைத்து  எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நபர் ஒருவர் அவர்களை காருக்குள் வைத்து கதவை மூடும் காட்சி பதிவாகியுள்ளது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சீக்கியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?

  • June 3, 2026
  • 0 Comments

பிரத்தானியாவில் ஹென்றி நோவாக்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. திக்வாவின் செயல்கள் சீக்கிய போதனைகளுக்கு முரணானவை என்று கூறி அவற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால், பிரத்தானியா முழுவதும் சீக்கியர்கள் பரவலாகக் குறிவைக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சீக்கியர்கள் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக வரும் செய்திகளால், தங்கள் சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதாக சீக்கியத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,  நோவாக்கின்  இறுதித் தருணங்களைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து மறுஆய்வு செய்யுமாறும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குருத்வாராக்களில் கூடுதல் பாதுகாப்பு […]

உலகம் செய்தி

நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு குவைத் உத்தரவு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளிவிவகார அமைச்சு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரானின் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த அதிகாரிகள் ‘ஏற்றுக்கொள்ளத்தகாத நபர்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குவைத் அரசு மிகக் கடுமையான காலக்கெடுவை விதித்துள்ளது. குவைத் சர்வதேச விமானநிலையம்மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவை உலுக்கிய ஹென்றி நோவாக்கின் மரணம்!! பல பகுதிகளில் போராட்டம்!

  • June 3, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இறக்கும் தருவாயில் இருந்த ஹென்றி நோவாக்கிற்கு கைவிலங்கிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் இந்த மோசமான நடத்தையை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 18 வயதான ஹென்றி நோவாக்கைக் கொலை செய்ததற்காக 23 வயதான விக்ரம் திக்வாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திக்வா தான் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொய் வாக்குமூலம் வழங்கிய நிலையில் இறக்கும் தருவாயில் இருந்த  ஹென்றி நோவாக்கிற்கு  கைவிலங்கிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியதை தொடர்ந்து அதிகாரி […]