ஐரோப்பா

இத்தாலியில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!!! இருவர் கைது!

இத்தாலியில் நான்கு புலம்பெயர்ந்தோர் காருக்குள் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து மூன்று ஆப்கானியர்களும் பாகிஸ்தான் நபர் ஒருவரும் காரினுள் வைத்து  எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நபர் ஒருவர் அவர்களை காருக்குள் வைத்து கதவை மூடும் காட்சி பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்