குவைத் விமான நிலையம் மீளவும் திறக்கப்பட்டது!
ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடிப்பட்டிருந்த நிலையில் மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இன்று அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கூறியிருந்தனர்.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து குவைத் அரசாங்கம் வான்வெளியை மூடியதுடன், விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போது வான்வெளி மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




