தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்வு!! இலங்கையிலும் அதிகரிப்பு!
உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (15) காலை 9.00 மணிக்கு பதிவான விலைகளுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் தங்கத்தின் விலை 6,000 ரூபாயால் உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, இன்று காலை கொழும்பு கடல் வீதி தங்கச் சந்தையில் 22 காரட் பவுண் ஒன்றின் விலை 360,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், 24 காரட் பவுண் ஒன்றின் விலை, 392,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





