இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரத்தில் மத்திய வங்கிக்கும் பங்கு?

திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, நிதிச் சட்டத்தின் மூலம் சுயாதீனமாக்கப்பட்ட பின்னர், எந்தவொரு தரப்பிற்கும் பொறுப்புக்கூறாத மற்றும் கட்டுப்படாத ஒரு நிறுவனமாகத் தன்னைத்தானே வரைவிலக்கணப்படுத்திக் கொண்டுள்ளதே இங்கு காணப்படும் பிரதான பிரச்சினையாகும் எனவும் அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரணை செய்யவும், இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அக்குழு எடுத்துக்கூறியுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்