ஐரோப்பா செய்தி

ஈரான்மீதான தடையை நீக்கமுடியாது: பிரான்ஸ் திட்டவட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. லெபனானிலும் நிலையான அமைதியை ஏற்படுத்த தமது நாடு முயற்சித்துவருகின்றது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Noel Barrot தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தாலும் , இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்பதே பிரான்ஸின் கோரிக்கையாகும். அதேவேளை, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் […]

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் ஹர்லி ஐரோப்பா செய்தி

மாற்றத்துக்கு வழிவிடுங்கள்: பிரித்தானிய பிரதமரிடம் கோரிக்கை

  • June 19, 2026
  • 0 Comments

“புதிய மாற்றத்திற்கான சூழல் தற்போது தேவைப்படுகிறது” – என்று பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Patrick Hurley தெரிவித்துள்ளார். லேபர் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பிரதமர் Keir Starmer தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” லேபர் கட்சியின் அரசியல் வரலாற்றில் கீர் ஸ்டார்மர் ஒரு மாபெரும் தலைவராக நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. […]

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் , முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை செய்தி

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு புதிய படகுகள்

  • June 19, 2026
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நேற்று (19) நடைபெற்றது. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார். இதன்போது முதற்கட்டமாக   1.8 மில்லியன் ரூபா Rs. 1.8 million பெறுமதியான 32 வலைகளும், 8.64 மில்லியன் Rs. 8.64 […]

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் தீவிர விசாரணைஇடம்பெற்றுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

விசாரணை வேட்டை தொடரும் – NPP அரசு திட்டவட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு, “வங்குரோத்தடைந்துள்ள எதிரணி, அரசியல் நடத்துவதற்குரிய காரணிகளை தேடி அலைகின்றன. அண்மையில் கூடாரம் அமைத்து நாடகம் நடத்தப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பால் எதிரணிகள் பின்வாங்கின. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான […]

ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய. தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரி தலைவர். அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்குக்கு மாகாணசபை அவசியம்

  • June 19, 2026
  • 0 Comments

“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய சோசலிஷக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை. அதற்கான தேவைப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. தெற்கைவிடவும் வடக்கு, கிழக்குக்குதான் இது முக்கியம். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI இன் வளர்ச்சி – Apple தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

  • June 19, 2026
  • 0 Comments

மெமரி சிப்களின் விலை “தாங்க முடியாத அளவுக்கு” உயர்ந்துள்ளதால்,  Apple  நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் என்று  அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம் குக்  எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியே இந்த மெமரி சிப் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் 18 மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெமரி சிப்களின் விலை, குறிப்பாக […]

உலகம்

“விமர்சனத்தை நிறுத்துங்கள்” : ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

  • June 19, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாகத்தின் அமைதி ஒப்பந்தத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ச்சியான எதிர்ப்பு அமெரிக்க இராணுவ உதவியைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே இஸ்ரேலுக்கு அனுதாபம் காட்டும் ஒரே நாட்டுத் தலைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இஸ்ரேலின் தற்காப்பு ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜனாதிபதி ட்ரம்ப் […]

இலங்கை

தங்தக்தின் விலை 9000 ரூபாவால் சரிவு!

  • June 19, 2026
  • 0 Comments

உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட கணிசமான சரிவின் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை 9000 ரூபாயால் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 24 காரட் பவுண் ஒன்றின் வலை 391,000 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று 382,000 காணப்படுகிறது. அதேபோல் 22 காரட் பவுண் ஒன்றின் விலை  359,700 இல் இருந்து 351,500 ஆக குறைந்துள்ளது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று US$ 4,138 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

லண்டன் புறப்பட தயாரான விமானத்தில் வெடிப்பு சம்பவம்

  • June 19, 2026
  • 0 Comments

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து நேற்றைய தினம் லண்டனுக்குப் புறப்படத் தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி  குறித்த விமானம் அதன்  நிறுத்தத்திற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய போக்குவரத்து அதிகாரிகள்  […]

கருத்து & பகுப்பாய்வு

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நெதன்யாகுவின் அரசியல் மரணத்திற்கான உரிமம்

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் நம்ப முடியவில்லை. இந்த சமாதான ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை எப்படித் தடுப்பது என்று அவர் தனது நெருங்கிய கூட்டாளிகளிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார், ஆனால் அவரது கூட்டாளிகளிடம்கூட பதில் இல்லை. ஜூன் 15 அன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தபோது, ​​நெதன்யாகுவின் தலையில் வானம் இடிந்து விழுந்தது. பெப்ரவரி […]