அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமாகப் பரவும் தட்டம்மை நோய்
அமெரிக்கா கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான தட்டம்மை நோய்ப் பரவலை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 2,318 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த ஆண்டு, 2,289 பாதிப்புகள் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட மூன்று இறப்புகள் பதிவாகியிருந்தது..
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமியின் தலைவர் ஆண்ட்ரூ ரேசின் (Andrew Racine), “தவிர்க்கக்கூடிய ஒரு நெருக்கடியை நாம் காண்கிறோம், இது குழந்தைகளை விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.




