உலகம்

டொமினிகன் குடியரசின் கடற்கரை விடுதியில் தீவிபத்து – பெண் பலி

  • June 20, 2026
  • 0 Comments

டொமினிகன் குடியரசின் பயாஹிபே கடற்கரை ரிசார்ட்டில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் இத்தாலியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் மருத்துவ சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பனை ஓலையால் ஆன கூரை அமைப்புகளின் சில பகுதிகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் H5 வகை பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டது

  • June 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக H5 வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டின் வேளாண்மை அமைச்சர் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கடல் பறவையான ‘பிரவுன் ஸ்குவா’  (brown skua) என்ற பறவையிடம் இந்த நோய் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் ‘ஜெயண்ட் பெட்ரல்’ (giant petrel) என்ற பறவையிடமும் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பறவைகளின் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ள H5 வகை தொற்று அவுஸ்திரேலியாவில் மட்டுமே கண்டறியப்படாமல் இருந்த நிலையில் தற்போது அங்கும் […]

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று பார்வையிட்டார் இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: உள்ளக விசாரணையே போதும் என்கிறார் நீதி அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

செம்மணி, மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நேற்று மாலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன […]

ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி- ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது

  • June 20, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து சுமார் 12 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற சிட்னியைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கப்பல் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ போதைப்பொருளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது. காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க இவர்கள் போலி முகவரிகளைப் பயன்படுத்தியதுடன், சரக்குகளைப் பெறும் இடங்களையும் பலமுறை மாற்றியுள்ளனர். இறுதியில் ஆஸ்திரேலிய […]

பராகுவேயின் மதியாஸ் கலார்சா வெற்றி கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

துருக்கியை வெளியேற்றியது பராகுவே:புதிய விதியின்கீழ் முதலாவது சிவப்பு அட்டை

  • June 20, 2026
  • 0 Comments

முதல் பாதியிலேயே முன்னணி வீரர் வெளி யேற்றப்பட்ட போதிலும், பராகுவே அணி தனது அசாத்தியமான தடுப்பாட்டத்தின் மூலம் துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியுள்ளது. இப்போட்டியில் அடிக்கப்பட்ட ஆட்டத்தின் அதிவேக கோலே இரு அணிகளுக்குமான வெற்றி-தோல்வியைத் தீர்மானித்தது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 4-1 என படுதோல்வி அடைந்திருந்த பராகுவே , நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த போட்டியில் ஆக்ரோஷமாக களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கிய 64-வது வினாடியிலேயே பராகுவேயின் மத்தியாஸ் […]

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜே.வி.பியிலும், பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியிலும் இருக்கின்றனர். அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் பனிப்போர்?

  • June 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார். இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு , “ தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கதைகள் கூறப்பட்டுவருகின்றன. இது எதிரணிகளின் எதிர்பார்ப்பாகும். ஆனால் உண்மை அதுவல்ல. தேசிய மக்கள் சக்தியாக நாம் ஒற்றுமையாக செயல்பட்டுவருகின்றோம். தேசிய […]

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இலங்கை செய்தி

செம்மணியில் 370 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு

  • June 20, 2026
  • 0 Comments

செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இந்த அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 370 எலும்புக் கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகம்

ஈராக்கில் இரகசியப் படை – கழுகு பார்வையில் இருந்து தப்பிக்க முயலும் ஈரான்

  • June 20, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவற்படை ஈராக் நாட்டில் சில ரகசியப் படைகளை அமைத்து அமெரிக்காவின் பார்வையில் இருந்து தப்பிக்க முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த படைகள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகள்மீது தாக்குதல் நடத்தியதாவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஈராக்கில் உள்ள எட்டுப் பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ஈராக்கில மூன்று அல்லது நான்கு ரகசியப் படைகள் உள்ளதாகவும், ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 10 போராளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறைந்தது ஏழுமுறை பாலைவனத்திலிருந்து ஏவுகணைத் […]

உலகம்

சிங்கப்பூரில் 235,000 டொலருக்கும் அதிக மதிப்புள்ள வைரங்கள் திருட்டு

  • June 20, 2026
  • 0 Comments

சிங்கப்பூரில் $235,000க்கும் மேல் மதிப்புள்ள வைரத்தை திருடிய குற்றச்சாட்டில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள கிரேத்தா ஆயர் வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் திருடப்பட்ட வைரங்களுடன் விமான நிலையம் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட வைரங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் […]

போட்டிக்குப் பிறகு மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

ஸ்காட்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை தந்த போட்டி

  • June 20, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி , ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு (Knockout Round) முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் 64,000-க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே மொராக்கோ அணி முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் நட்சத்திரம் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) தூக்கிக் கொடுத்த பந்தை, 25 வயதான இஸ்மாயில் சைபாரி மிக நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி […]