உலகம்

நிரந்தர அமைதி ஒப்பந்தம் – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

  • June 20, 2026
  • 0 Comments

நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு இணங்கத் தவறினால், “அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காத” நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பெஞ்சமின் நெதன்யாகு சீர்குலைக்க முயற்சிக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.    

உலகம்

லிபியாவின் கிழக்கு கடற் பகுதியில் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு

  • June 20, 2026
  • 0 Comments

லிபியாவின் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் 15 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. 

இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 A சித்தி

  • June 20, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 70.1 சதவீதமான மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றுள்ளனர். அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண […]

உலகம்

50 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் விசா கட்டணம் உயர்வு

  • June 20, 2026
  • 0 Comments

ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு ஜப்பான் அரசாங்கம்   வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய விசா கட்டணங்கள் வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டண அமைப்பின் கீழ், ஒற்றை நுழைவு விசாவின் கட்டணம் 3,000 ஜப்பானிய யென்னிலிருந்து 15,000 ஜப்பானிய யென்னாகவும், பல நுழைவு விசாவின் கட்டணம் 6,000 ஜப்பானிய யென்னிலிருந்து 30,000 ஜப்பானிய யென்னாகவும் […]

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து, சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச நிபுணத்துவம் அவசியம்

  • June 20, 2026
  • 0 Comments

” யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் எம்.பி., நோர்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார். இலங்கையின் […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் நீதி அமைச்சர் யாழில் சந்திப்பு நடத்தினார். இலங்கை செய்தி

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் நீதி அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று (20) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தனர். இந்தச் சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான அவசர தேவைப்பாடுகள் மற்றும் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கை […]

இஸ்ரேலின் தாக்குதலையடுத்து தெற்கு லெபனானில் காணப்படும் காட்சி உலகம் செய்தி

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் குண்டு மழை

  • June 20, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஈரான் உடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தொடர் மோதல்கள் குறித்து வாஷிங்டன் கவலை வெளியிட்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாகவே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறினாலும், பிரதமர் நெதன்யாகுவிற்கு ராணுவ நடவடிக்கைகளைத் தொடர உள்நாட்டு அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்தப் போர்ச் சூழலால் லெபனானில் சுமார் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, […]

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர்... உலகம் செய்தி

ஈரான் பறக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி Mohsin Naqvi , ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சியை சந்திப்பதற்காகத் தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உயர்நிலைச் சந்திப்பு குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நிரந்தர அமைதிக்குரிய ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த முக்கியப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடுகளுக்கு இடையிலான உறவு […]

ஈரானுடனான போர் நிறுத்தம் குறித்த நம்பிக்கைகள் மற்றும் புதிய முதலீடுகள் காரணமாக, அமெரிக்காவின் பிரதான பங்குச் சந்தைக் குறியீடு சமீபத்தில் சாதனை அளவுகளை எட்டியுள்ளதால், டிரம்பின் கூற்று ஓரளவு சரியானது. உலகம் செய்தி

அமெரிக்காவில் விலைகள் உண்மையிலேயே சரிந்து வருகின்றனவா? டிரம்பின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள உண்மை

  • June 20, 2026
  • 0 Comments

ஈரானுடனான ஆரம்பகட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் எண்ணெய் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது, பங்குச் சந்தை சாதனை அளவை எட்டியுள்ளது, வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது மற்றும் விலைகள் குறைந்து வருகின்றன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், இந்தக் கூற்றுகளில் சில உண்மையானவை என்றும், மற்றவை மிகைப்படுத்தப்பட்டவை அல்லது தவறாக வழிநடத்துபவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானுடனான போர் நிறுத்தம் குறித்த நம்பிக்கைகள் மற்றும் புதிய முதலீடுகள் காரணமாக, அமெரிக்காவின் பிரதான பங்குச் சந்தைக் குறியீடு […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பயணத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது உலகம் செய்தி

முடிவுக்கு வருகிறது இஸ்லேல் பிரதமரின் அரசியல்: அதிர்ச்சி தரும் கருத்து கணிப்பு

  • June 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புவது தெரியவந்துள்ளது. சுமார் 59 சதவீத மக்கள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக 33 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். நெதன்யாகுவிற்குப் பிறகு லிகுட் கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்களாக நிர் பர்கத் மற்றும் யாரிவ் லெவின் போன்ற முக்கிய அமைச்சர்களை […]