உலகம்

சிங்கப்பூரில் 235,000 டொலருக்கும் அதிக மதிப்புள்ள வைரங்கள் திருட்டு

சிங்கப்பூரில் $235,000க்கும் மேல் மதிப்புள்ள வைரத்தை திருடிய குற்றச்சாட்டில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள கிரேத்தா ஆயர் வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட வைரங்களுடன் விமான நிலையம் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து திருடப்பட்ட வைரங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்