உலகம்

டொமினிகன் குடியரசின் கடற்கரை விடுதியில் தீவிபத்து – பெண் பலி

டொமினிகன் குடியரசின் பயாஹிபே கடற்கரை ரிசார்ட்டில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் இத்தாலியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் மருத்துவ சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பனை ஓலையால் ஆன கூரை அமைப்புகளின் சில பகுதிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டிருப்பதாலும், காற்றின் நிலைமைகளாலும் தீ வேகமாகப் பரவியதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தீவிபத்து குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்