உலகம்

ஈராக்கில் இரகசியப் படை – கழுகு பார்வையில் இருந்து தப்பிக்க முயலும் ஈரான்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவற்படை ஈராக் நாட்டில் சில ரகசியப் படைகளை அமைத்து அமெரிக்காவின் பார்வையில் இருந்து தப்பிக்க முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த படைகள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகள்மீது தாக்குதல் நடத்தியதாவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவலை ஈராக்கில் உள்ள எட்டுப் பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கில மூன்று அல்லது நான்கு ரகசியப் படைகள் உள்ளதாகவும், ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 10 போராளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் குறைந்தது ஏழுமுறை பாலைவனத்திலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஈராக்கின் தெற்கு நகரங்களான பஸ்ரா, சமாவாவில் இருந்து குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு உள்ளிட்ட சிற்றரசுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மே 17ஆம் திகதி வரை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்