உலகம் செய்தி

இந்தோ,பசிபிக் பாதுகாப்பு: பிரதமர் மோடி வழங்கியுள்ள உறுதிமொழி!

  • May 7, 2026
  • 0 Comments

இந்தோ, பசிபிக் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி என்பவற்றில் இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு டெல்லியில் நேற்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உறவுகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து […]

அரசியல் இலங்கை செய்தி

‘குற்றப் பிரேரணை’:தயாசிறி எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றப் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார். வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துகளுக்காகவே இந்நிலை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ” ஜனாதிபதி தனது விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்குமாறு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார். இத்தகைய நடவடிக்கை நீதிபதிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. அவர்கள் தங்கள் பிழைப்புக்காக தீர்ப்புகளை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள். அதன்படி, இது நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு தெளிவான […]

செய்தி விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு விளையாட்டுக்கான தடை நீடிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடையை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சு நீடித்துள்ளது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சால் நேற்று விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட தொடர்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் இருதரப்பு போட்டியில் இந்தியா பங்கேற்காது.’ எனக் கூறப்பட்டுள்ளது. […]

செய்தி பொழுதுபோக்கு

ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச்சடங்கு…!

  • May 7, 2026
  • 0 Comments

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகின்றது. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி. இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அண்மையில் அங்கு சென்ற அவர், செவ்வாய்க்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]

செய்தி விளையாட்டு

ஆர்.சி.பியை வீழ்த்துமா லக்னோ?

  • May 7, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 50 ஆவது லீக் ஆட்டத்தில் Lucknow Super Giants , Royal Challengers Bengaluru ஆகிய அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான RCB அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் […]

அரசியல் இலங்கை செய்தி

ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிப்பாரா விஜய்?

  • May 7, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு ஈழத் […]

ஆஸ்திரேலியா செய்தி

கங்காரு தேசத்துக்கு மரண பீதியை ஏற்படுத்தியுள்ள வெப்ப அலை!

  • May 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் வரும் 2100-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6000-ஆக உயரும் என மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இறப்பு விகிதத்தை விட 24 மடங்கு அதிகமாகும் என்றும், குறிப்பாக வடக்குப் பகுதிகளில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்த அச்சுறுத்தல் இதய மற்றும் சுவாச நோய்களைத் தூண்டி பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக […]

உலகம்

அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில் தாக்குதல் : தொடரும் அச்சுறுத்தல்!

  • May 7, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், இஸ்ரேல் நேற்று பெய்ரூட் மீது முதல் முறையாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் நேற்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை   இஸ்ரேல் காட்ஸ் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம்   உறுதிப்படுத்தியுள்ளது. லெபனான் போர்நிறுத்தம், பரந்த அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. ஈரானும் அமெரிக்காவும் தங்கள் மோதலை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா சொர்க்கம்: தாயகம் திரும்பும் ‘ஐ.எஸ். பெண்கள்’ உருக்கம்!

  • May 7, 2026
  • 0 Comments

சிரியாவில் ஐஎஸ் (ISIS) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இன்று (07) ஆஸ்திரேலியாவை வந்தடையவுள்ளனர். நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் அடங்கிய குழுவினர் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாயகம் திரும்பும் பெண்களில் சிலர் பயங்கரவாதக் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் எச்சரித்துள்ளனர். சிரியாவின் அல்-ரோஜ் (Al […]

இலங்கை செய்தி

இலங்கை நாடாளுமன்றில் வியட்நாம் ஜனாதிபதி நாளை உரை!

  • May 7, 2026
  • 0 Comments

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம்  இன்று 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார். 8 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என தெரியவருகின்றது. அதேவேளை, இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.