தங்கத்தின் எதிர்காலம் – உன்னிப்பாக கவனிக்கும் முதலீட்டாளர்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.1 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
உடனடித் தங்கம், ஒரு அவுன்ஸுக்கு 1.1 சதவீதம் சரிந்து 4,067.72 டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்களும் சரிந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை 4000 டொலருக்கு சற்று அதிகரித்துள்ளது. இதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
யாஹூ ஃபைனான்ஸின்படி, கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் ஐந்து அமர்வுகளில் தங்கத்தின் விலை சரிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் தங்கதின் விலை வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.




