உலகம்

அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில் தாக்குதல் : தொடரும் அச்சுறுத்தல்!

ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், இஸ்ரேல் நேற்று பெய்ரூட் மீது முதல் முறையாகத் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

அதேநேரம் நேற்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை   இஸ்ரேல் காட்ஸ் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம்   உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனான் போர்நிறுத்தம், பரந்த அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஈரானும் அமெரிக்காவும் தங்கள் மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாகக் கூறிவரும் நிலையில், இந்த தாக்குதல் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை லிட்டானி நதிக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் தெற்கு லெபனானில் தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!