ஐரோப்பா

EES அமைப்பு – ஐரோப்பிய தலைவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்

பயோமெட்ரிக் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு (EES) திறம்பட செயல்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ACIயின் தலைவரான ஸ்டெஃபான் ஷுல்டே (Stefan Schulte) இந்த அமைப்பு திறம்பட செயற்படவில்லை என்பதை ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

EES-இன் தற்போதைய நிலை ஐரோப்பா முழுவதிலும் உள்ள விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட ஷெங்கன் பகுதி நுழைவு-வெளியேறும் அமைப்பு (EES), சில சமயங்களில் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும் நீண்ட வரிசைகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியம் சாராத பயணிகள் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படவும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்