உலகம்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

  • May 11, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்ததன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 104.1 டொலராகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது.

உலகம்

ஈரானின் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்!

  • May 11, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட தெஹ்ரானின் முன்மொழிவில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது, அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஈரான் மீண்டும் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் ஆகியவை அடங்கியிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,  “ஈரானியப் பிரதிநிதிகளின் பதிலை […]

இலங்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • May 11, 2026
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, சில மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கைக விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிரிந்தி ஓயாவின் தனமல்வில பகுதியிலுள்ள நீர் மானியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், அங்கு தாழ் நில பகுதிகளில் வசிக்கும் […]

இந்தியா

பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துங்கள் – மோடி அறிவுரை!

  • May 10, 2026
  • 0 Comments

பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவதே தற்போதைய தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தெலங்கானாவில் மதிப்புமிக்க வளர்ச்சித் திட்டங்களை காணொளி வாயிலாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் . அது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரின் பாதகமான தாக்கத்தையும் குறைக்கும். கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தித் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் […]

உலகம்

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நெதன்யாகு வெளியிட்ட செய்தி : அமைதி திரும்புமா?

  • May 10, 2026
  • 0 Comments

ஈரான் தனது திறன்களை தக்கவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளதாக தெரிவித்துள்ளார். CBS “60 Minutes, நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த செவ்வியில் மேலும் தெரிவித்த அவர், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் “பெரும்பான்மையானவற்றைச் சாதித்துள்ளது, ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை” என்று கூறியுள்ளார். ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவிடவில்லை, தனது அணுசக்தி தளங்களை அகற்றவில்லை, தனது பிராந்திய முகவர்களுக்கு ஆதரவளிப்பதை […]

ஐரோப்பா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் – செல்வாக்கை நிலைநாட்ட முயலும் மக்ரோன்!

  • May 10, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் கிழக்கு ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் நேற்று தொடங்கியுள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவரது இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்ரோன் இந்த பயணத்தின்போது கென்யா மற்றும் எத்தியோப்பியாவிற்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு ஆப்பிரிக்கத் தலைவர்களையும் வணிக நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் அதேவேளை பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  இந்தப் பயணத்தின் […]

உலகம்

01 பில்லியன் கச்சா எண்ணெய் இழப்பு : நிலமை சரியானாலும் மீண்டு வர நீண்டகாலம் வேண்டும்!

  • May 10, 2026
  • 0 Comments

கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச சந்தைகளில் சுமார் 01 பில்லியன் கச்சா எண்ணெயை இழந்துள்ளதாக சவுதி அரம்கோ தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் எரிசக்தி சந்தை கடுமையான நெருக்கடியில் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், எண்ணெய் விநியோக வழிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சந்தை […]

விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் நாளை பலப்பரீட்சை

  • May 10, 2026
  • 0 Comments

ஐபிஎல் 2026 தொடரின் 55 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் இரவு 7. 30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ச்சியான தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்துள்ள பஞ்சாப் அணிக்கு, இந்தப் போட்டி பெரும் சவாலாக அமைந்துள்ளது. மறுபுறம், புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ள அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ்அணியில்  இன்று சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் – முன்னாள் ஆதரவாளர் வலியுறுத்தல்

  • May 10, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சரும் ஸ்டார்மரின் ஆதரவாளருமான ஒருவர், பிரதமர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் மாதம் வரை அமைச்சரவை அலுவலக அமைச்சராக இருந்த ஜோஷ் சைமன்ஸ் (Josh Simons) தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஸ்டார்மர் விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். வேல்ஸில் உள்ள 40 கவுன்சில்கள் மற்றும் செனட் மீதான கட்டுப்பாட்டை தொழிற்கட்சி இழந்துள்ளது. மேலும் சுமார் 1,500 கவுன்சிலர்கள் தங்கள் இடங்களை […]

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவிற்கு புதிய பொறுப்பு!

  • May 10, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சருக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் சுகாதார அமைப்பில் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் திறமையாகக் கொண்டு சேர்ப்பது, இந்தச் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் குறைப்பது மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், மாவட்ட அளவில் சுகாதார சேவைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் கவனம் குவிந்துள்ளது. […]