UAE4இன் கடற்கரைக்கு அருகில் இருந்த கப்பலை கைப்பற்றிய மர்மநபர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கடற்கரைக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்த பெயரிடப்படாத கப்பல் ஒன்றை மர்ம நபர்கள் தற்போது ஈரானை நோக்கிக் கொண்டுச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலானது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து 38 கடல் மைல் வடகிழக்கில், ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை இரகசியமாக சந்தித்ததாக கூறிய சிலமணிநேரங்களுக்கு பின்பு இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளது.




