ஐரோப்பா

கருங்கடலில் பயணிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல்

கருங்கடலில் பயணித்த வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதல்களில் எகிப்திய சமையல்காரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ‘விக்ட்ரெஸ்’ என்ற துருக்கிய உலர் சரக்குக் கப்பல் தீப்பிடித்து எரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா கொடியை ஏந்திய ‘விக்ட்ரெஸ்’ கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் துருக்கி மற்றும் இந்திய குடிமக்கள் உட்பட மேலும் எட்டு பணியாளர்கள், உக்ரேனிய மீட்பு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பெலிஸ் மற்றும் பலாவ் கொடிகளை ஏந்திய மேலும் இரண்டு கப்பல்கள் மீதும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டாலும் அவை வெற்றிகரமாக பயணித்துள்ளதாக உக்ரைன் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

“ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு முக்கிய பாலத்தின் இருபுறமும் உள்ள எரிசக்தி மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யா இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்