இந்தியா செய்தி

ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு: 5ஆவது இடத்தில் இந்தியா!

  • April 29, 2026
  • 0 Comments

ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதென தரவுகள் தெரிவிக்கின்றன. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் அனைத்து உலக அமைதி ஆய்வுக் கழகம வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 2025ஆம் ஆண்டில் இந்தியா தனது ராணுவத் தேவைக்காக 92.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகமாகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதை […]

இலங்கை செய்தி

ஹட்டனில் கோர விபத்து: ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!!

  • April 29, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா , போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பாலத்திற்கு அருகாமையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு […]

உலகம் செய்தி

துப்பாக்கி ஏந்திய புகைப்படத்துடன் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

  • April 29, 2026
  • 0 Comments

ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரூத் பக்கத்தில் பொதுவாக எழுத்து மூலமாக தனது கருத்துகளைத் முன்வைக்கும் ட்ரம்ப், இம்முறை புகைப்படம் ஒன்றையும் இணைந்துள்ளார். குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் அதிநவீன துப்பாக்கியுடன் திரைப்பட கதாநாயகன் போல் ட்ரம்ப் அதில் காட்சியளிக்கின்றார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல்சுற்று […]

உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து ; 2 பேர் பலி

  • April 29, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின்  Parafield  விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று இன்று புதன்கிழமை (29) விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் தரையிறங்குவதற்கு முயன்ற போது விமானக் கூடாரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Diamond DA42 என்ற இரட்டை எஞ்சின் அமையப்பெற்ற சிறிய ரக பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்துக்குள் இருந்த விமானியும் பயணி ஒருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, விமானக்கூடாரத்துக்குள் விமானம் மோதியபோது அந்த […]

உலகம் செய்தி

ஈரானில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 29, 2026
  • 0 Comments

போர் தொடங்கிய காலத்திலிருந்து ஈரானில் குறைந்தபட்சம் 21 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிராக ஈரான் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதே காலகட்டத்தில் ஈரானில் 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய அதிகாரிகளின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார். போர் சூழலுக்கு மத்தியிலும் […]

இலங்கை செய்தி

மலையக மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு!

  • April 29, 2026
  • 0 Comments

“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சிறிதரன் எம்.பி. மேலும் கூறியவை […]

உலகம் செய்தி

நேட்டோ அமைப்பின் அவசியத்துவத்தை வலியுறுத்திய மன்னர்!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நோட்டோ உதவவில்லை என ட்ரம்ப் விமர்சித்துவருகின்றார். குறித்த அமைப்பை காகிதப் புலி எனக்கூட விளாசித் தள்ளி இருந்தார். இந்நிலையிலேயே நேட்டோவுக்கு ஆதரவாக மன்னர் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு நேட்டோவின் பாதுகாப்பு ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மன்னர், தற்போதைய சவாலான உலகச் சூழலில் இந்த ஒற்றுமை அவசியம் என்பதையும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல் : 24 மணிநேரத்துக்குள் காசாவில் ஐவர் பலி!

  • April 29, 2026
  • 0 Comments

காசாவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐவர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. அதேவேளை, 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் நிறுத்தகாலப்பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

யாழிலும், வன்னியிலும் மே தினம் நடத்துகிறது NPP

  • April 29, 2026
  • 0 Comments

  சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்படி தகவலை வெளியிட்டார். “மக்கள் ஆட்சிக்கு பலம்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு, “கொழும்பில் இம்முறை பிரதான மேதின […]

இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும். போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!