தைவான் அதிபருக்கு வான்வழி அணுகளை மறுத்த நாடுகள் – சீனாதான் காரணமா?
தைவானின் அதிபர் லாய் சிங்-தே ( Lai Ching-te’s) ஆப்பிரிக்க நாடான எஸ்வதினிக்கு செல்ல இருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லின் சியா-லுங் ( Lin Chia-lung) எஸ்வதினிக்கு பயணம் மேற்கொண்டார்.
சீனிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே அதிபர் லாயின் விமானம் செஷல்ஸ், மொரிஷியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளின் வான்பரப்பை அணுக அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் லின், “சர்வாதிகார சக்திகளால்” தைவான் பின்வாங்காது என்றும், சவால்கள் இருந்தபோதிலும் உலகத்துடன் ஈடுபடுவதற்கான தனது உறுதியை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்ததோடு, “ஒரே-சீனக் கொள்கையை” நிலைநிறுத்தியதற்காக அந்த மூன்று நாடுகளையும் பாராட்டியுள்ளது.





