இலங்கை செய்தி

ஈரான் கப்பல் விடயத்தில் இந்தியாமீது பழிசுமத்த கூடாது: செல்வம் எம்.பி.

  • March 7, 2026
  • 0 Comments

“இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க போர்க்கப்பல் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது.” இவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் Selvam Aadikalanathan தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு கூறினார். “ஈரான் போர்க் கப்பல் இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவே பொறுப்பு என்றெல்லாம் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல. இலங்கைக்கு ஆபத்து […]

உலகம்

ஈரானில் நிலநடுக்கம்

  • March 7, 2026
  • 0 Comments

ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில்  இன்று (07) காலை 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதேவேளை, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • March 7, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி Minister Kumara Jayakody மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான ‘லங்கா’ உர நிறுவனத்தின் துணை கொள்வனவு முகாமையாளராக குமார ஜயக்கொடி Kumara Jayakody பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்,கொள்வனவின் போது, தனியார் நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக நன்மை பெற உதவியதாக, […]

உலகம்

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ரஷ்யா? உளவு தகவல் வழங்கியது யார்?

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இலக்குகளை தாக்குவதற்கு தேவையான உளவுத் தகல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மேற்படி உளவு தகவல்களால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானின் ராணுவத் திறன் முறியடிக்கப்பட்டுவருகின்றது எனவும் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குரிய ட்ரோன்களை ஈரான் வழங்கிவருகின்றது. இதற்கு பிரதி உபகாரமாகவே ரஷ்யா உளவு தகவல்களை வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், […]

ஐரோப்பா

வார இறுதியில் லண்டனில் போராட்டங்கள் வெடிப்பு!

  • March 7, 2026
  • 0 Comments

இந்த வார இறுதியில் லண்டன் முழுவதும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதரகங்களுக்கு அருகில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய ஸ்டேஜ் ஃபார் ஃப்ரீடம் (Stage for Freedom) ஏற்பாடு செய்த ஈரானிய அரசாங்க எதிர்ப்பு பேரணி, வைட்ஹாலில் (Whitehall) இருந்து ஈரானிய தூதரகம் வரை செல்லும். அதேபோல்   அணு ஆயுதக் குறைப்புக்கான பிரச்சாரம் (CND) உள்ளிட்ட குழுக்களின் தனி போராட்டம், ஈரான் மீதான தாக்குதல்களை […]

இலங்கை

ஜா-எலயில் துப்பாக்கிச் சூடு

  • March 7, 2026
  • 0 Comments

ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர […]

உலகம்

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 09 சதவீதத்தால் உயர்வு!

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை நேற்று (6) முதல் 9% அதிகரித்து தற்போது 93 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. 2 ஆண்டுகளில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  கடைசியாக கச்சா எண்ணெய் விலை 2023 செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் அதிகரித்திருந்தது. தற்போது மத்தியக் கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் எண்ணெய் […]

ஆஸ்திரேலியா செய்தி

மத்திய கிழக்கிலுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க விசேட ஏற்பாடு!

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆஸ்திரேலிய Australian அரசாங்கம் புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து Doha சவுதி அரேபியாவின் ரியாத் Riyadh நகருக்கு விசேட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன, அங்கிருந்து வணிக விமானங்கள்மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, குவைத், லெபனான் மற்றும் பஹ்ரைன் […]

உலகம் செய்தி

பாரிய வன்வழித் தாக்குதலை முறியடித்தது சவூதி!

  • March 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படைகள் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. ஷைபா எண்ணெய் வயல் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஆளில்லா விமானங்கள் மற்றும் இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ballistic m ஏவுகணை ஆகியவை இடைமறித்து அழிக்கப்பட்டன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த எண்ணெய் தளம் நாளொன்றுக்கு பத்து லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி […]

இலங்கை

ஈரானிய கப்பல் பணியாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

  • March 7, 2026
  • 0 Comments

ஈரானிய கப்பல் பணியாளர்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக  ரொய்டர்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. ஐஆர்ஐஎஸ் தேனா ( IRIS Dena) போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை கேட்டுக் கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை பிரச்சார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் […]