ஆஸ்திரேலியா செய்தி

மத்திய கிழக்கிலுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க விசேட ஏற்பாடு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆஸ்திரேலிய Australian அரசாங்கம் புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து Doha சவுதி அரேபியாவின் ரியாத் Riyadh நகருக்கு விசேட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன,

அங்கிருந்து வணிக விமானங்கள்மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, குவைத், லெபனான் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கும் தூதரக உதவிகளை ஆஸ்திரேலியா விரிவுபடுத்தியுள்ளது.

அதேவேளை எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் விமான சேவைகளைத் தற்காலிகமாக மீண்டும் தொடங்கியுள்ளன.

இதுவரை ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் வெற்றிகரமாகத் தங்களின் நாடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் வெளியேற்ற அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி