பாரிய வன்வழித் தாக்குதலை முறியடித்தது சவூதி!
சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படைகள் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
ஷைபா எண்ணெய் வயல் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஆளில்லா விமானங்கள் மற்றும் இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ballistic m ஏவுகணை ஆகியவை இடைமறித்து அழிக்கப்பட்டன.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த எண்ணெய் தளம் நாளொன்றுக்கு பத்து லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இலக்கு வைக்கப்பட்ட விமானப்படை தளம் முன்னதாக அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மூலோபாய இடமாகும்.





