உலகம் செய்தி

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு

  • March 25, 2026
  • 0 Comments

தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ், எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வழிகளை பாதுகாக்க, வொஷிங்டனுடன் இணைந்து பணியாற்றுவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு சென்றுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், வியட்நாமில் டீசல் விலை மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அரசப் புள்ளிவிபரங்கள் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் ஈரான் ரகசிய பேச்சு?

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார். ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தூதவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர நட்பு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கத் தரப்புடன் நேரடியாகப் பேசவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் Work From Home முறைமையை மேம்படுத்த திட்டம்!

  • March 25, 2026
  • 0 Comments

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் Dr. Harini Amarasooriya தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுநிர்வாகம் , சுகாதாரம், கல்வி மற்றும் நீதி ஆகிய அமைச்சுகளின் […]

உலகம் செய்தி

ஈரானுடன் பேச்சு: ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக களத்தில்!

  • March 25, 2026
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இணைந்து ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கையாளுவதாக இஸ்ரேலிய அமைச்சர் Nir Barkat தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முரண்பாடுகள் தென்பட்டாலும், இரு தலைவர்களும் ஒருமித்த நோக்கத்துடன் இந்த விவகாரத்தை அணுகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் அந்த நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவத் திறன்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மை இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், […]

உலகம்

600 மணித்தியாலங்களைக் கடந்த இணையத் தடை

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக NetBlocks நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ஈரான் நாட்டு மக்கள் சர்வதேச தகவல் வலைப்பின்னல்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் காலத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை இதன் மூலம் மீறப்படுவதாகச் சில ஆய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, அரசாங்கத்தின் தடையை மீறி அவ்வப்போது இணையத்துடன் இணைய முயன்ற 466 பேர் கடந்த சில நாட்களில் ஈரான் […]

விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி T-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

  • March 25, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் தென்னாபிரிக்கா South Africa அணிகளுக்கிடையிலான கடைசி T – 20 போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 3-2 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 2-2 கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று (25) 5-வது T20 போட்டி Hagley Oval மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய […]

பொழுதுபோக்கு

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சூரி!

  • March 25, 2026
  • 0 Comments

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் Poster வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. `கொட்டுக்காளி’, `விடுதலை’, `மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகின்றார். `இன்று நேற்று நாளை’ மற்றும் `அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உலகம் செய்தி

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கு விரைகிறது விசேட படைப்பிரிவு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தயாராகிவருகின்றது. மத்திய கிழக்கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நகர்வு அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. முக்கியமான நிலப்பரப்புகளைக் கைப்பற்றும் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலை புதிய துணைவேந்தர் பதவியேற்பு!

  • March 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி புதன்கிழமை (25) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகள் நீக்கம்: ட்ரம்பின் 15 அம்ச திட்டம் கூறுவது என்ன?

  • March 25, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதுடன், ஆயுதமேந்திய குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானின் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்கவும் மற்றும் மின்சாரத் தேவைக்காக சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஹார்முஸ் […]

error: Content is protected !!