பிரித்தானியர் காலத்து ரயில் அனுபவம் : திருகோணமலையை வந்தடைந்த புகையிரதம்!
வெளிநாட்டு சுற்றுலா பயனிகளுடன் இலங்கையின் புகழ்பெற்ற Viceroy Special என்ற சொகுசு சுற்றுலா புகையிரதம் திருகோணமல புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளது. இது இலங்கையில் தற்போது இயங்கக்கூடிய நிலையில் உள்ள நீராவி இயந்திரம் (Steam Locomotive) ஆகும். சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலான பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த இயந்திரம், பிரித்தானியர் காலத்து புகையிரதப் பயணத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2024 பெப்ரவரி மாதம் முதல் இந்த புகையிரதம் மீண்டும் தனது சேவையைத் ஆரம்பித்துள்ளது […]













