ஐரோப்பா

14 ஆண்டுகளில் முதல் முறையாக சீனா செல்லும் அயர்லாந்து பிரதமர்!

  • January 4, 2026
  • 0 Comments

அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் (Micheál Martin) முதல் முறையாக சீனாவிற்கு செல்லவுள்ளதாக நேற்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக சீனா செல்லும் முதல் ஐரிஸ் ஜனாதிபதி மைக்கேல் மார்ட்டின் ஆவார். இந்த விஜயத்தின் மூலம் சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வளர்க்கவும் அயர்லாந்துடன் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் சீஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு சீனா 42.7% வரை தற்காலிக […]

உலகம்

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) பதவியேற்பு!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் துணை ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். வெனிசுலாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க அவர் பதவி ஏற்றுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிர்வாக தொடர்ச்சியையும் தேசத்தின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுலா பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்” என்று நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. “குடியரசுத் தலைவர் கட்டாயமாக இல்லாத நிலையில், அரசின் தொடர்ச்சி, அரசாங்க நிர்வாகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான பொருந்தக்கூடிய […]

உலகம் செய்தி

நாட்டிற்கு சுதந்திர நேரம் வந்துவிட்டது – வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்

  • January 3, 2026
  • 0 Comments

அமெரிக்கப்(America) படைகளால் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) கைது செய்யப்பட்ட பிறகு, வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) தனது நாட்டிற்கு சுதந்திர நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஜூலை 2024ல் மதுரோ சர்ச்சைக்குரிய மறுதேர்தலுக்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் நோபல் அமைதிப் பரிசு பெற்ற மச்சாடோ, எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியா(Edmundo González Urrutia) ஜனாதிபதியாக உடனடியாக தனது அரசியலமைப்பு ஆணையை ஏற்க வேண்டும் என்று Xல் பதிவிட்டுள்ளார். 2024 […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கைவிலங்குடன் நிக்கோலஸ் மதுரோவின் படத்தை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

  • January 3, 2026
  • 0 Comments

அமெரிக்க(America) இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) தனது ட்ரூத் சோஷியலில்(Truth Social) அமெரிக்க போர்க்கப்பலில் கைவிலங்கு மற்றும் கண்கள் கட்டப்பட்ட வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 63 வயதான தென் அமெரிக்கத் தலைவர், கண்கள் மூடப்பட்டு பெரிய ஹெட்ஃபோன்களுடன்(headphones) ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக் கொண்டிருக்கும் படம் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – […]

உலகம் செய்தி

பிரேசிலில் பேருந்து மற்றும் லாரி மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு

  • January 3, 2026
  • 0 Comments

தெற்கு பிரேசிலில்(Brazil) பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் ஃபெடரல் நெடுஞ்சாலை காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல்(Rio Grande do Sul) மாநிலத்தில் உள்ள ஃபெடரல் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தின் விளைவாக லாரியின் ஒரு பகுதி பேருந்தின் உள்ளேயே சிக்கிக்கொண்டதால் மீட்புப் பணியாளர்கள் வாகனத்தை […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – இருவர் கைது

  • January 3, 2026
  • 0 Comments

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் புலந்த்ஷர்(Bulandshahr) மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூரையிலிருந்து தூக்கி எரிந்து கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து சிக்கந்தராபாத் காவல்துறையினர் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். ராஜு(Raju) மற்றும் வீரு(Veeru) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் வசிக்கும் பகுதியில் உள்ளனர். சிறுமி மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கி சூட்டில் இரு சந்தேக […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்து நபர் சிகிச்சை பலனின்றி மரணம்

  • January 3, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) சில நாட்களுக்கு முன்பு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து நபர் டாக்காவில்(Dhaka) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பினார். இந்நிலையில், தாக்குதலுக்கு பிறகு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் இரு தனித்தனி மோதலில் 14 மாவோயிஸ்டுகள் கொலை

  • January 3, 2026
  • 0 Comments

சத்தீஸ்கரின்(Chhattisgarh) சுக்மா(Sukma) மற்றும் பிஜாப்பூர்(Bijapur) மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி மோதல்களில் 14 மாவோயிஸ்டுகள்(Maoists) கொல்லப்பட்டுள்ளனர். 14 மாவோயிஸ்டுகளில், சுக்மாவில் 12 பேரும் பிஜாப்பூரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் இன்னும் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் மோதல் சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாராம்(Kistaram) பகுதியில் நடந்தது, அங்கு குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். […]

உலகம் செய்தி

சீனாவில் மூட நம்பிக்கையால் சிறுமியை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு சிறைதண்டனை

  • January 3, 2026
  • 0 Comments

தெற்கு சீனாவில்(China) ஒரு பெண் மற்றும் அவரது மூத்த மகளுக்கு, மூடநம்பிக்கையான “பேயோட்டுதல்” சடங்கின் போது இளைய மகளை கொன்றதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் குவாங்டாங்(Guangdong) மாகாணத்தின் ஷென்செனில்(Shenzhen) இடம்பெற்றுள்ளது. லி(Li) என்ற குடும்பப்பெயர் கொண்ட தாயும், அவரது மூத்த மகளும், ஆன்மீக பேய் பிடித்தல் உள்ளிட்ட மூடநம்பிக்கை நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஆழமாக ஈடுபட்டிருந்தனர், அவர்கள் தங்கள் குடும்பத்தை பேய்கள் தாக்குவதாக நம்பினர். சம்பவம் நடந்த நாளில், லீயின் இளைய […]

உலகம் செய்தி

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்

  • January 3, 2026
  • 0 Comments

தென் அமெரிக்க(South American) நாடான வெனிசுலாவின்(Venezuela) மீது தாக்குதல் நடத்த அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ரஷ்யா கண்டித்ததுடன், வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவுக்கு(Nicolas Maduro) என்ன நடந்தது என்பது குறித்து உடனடி விளக்கம் கோரியுள்ளது. மேலும், “அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புச் செயலைச் செய்தது. இது மிகவும் கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இத்தகைய நடவடிக்கைகளை […]