இந்தியா இலங்கை செய்தி

இலங்கை, இந்திய காவல் படைகள் எடுத்துள்ள முக்கிய முடிவு

இந்திய மற்றும் இலங்கை கடலோரக் காவல்படைகள், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை கடலோரக் காவல்படைகள், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

இலங்கை கடலோரக் காவல்படை தலைமையகத்தில் நடைபெற்ற 9-வது இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர்மட்டக் கூட்டத்தில் இந்த உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இரு கடலோரக் காவல்படைகளின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியக் குழுவிற்கு இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணியும், இலங்கை குழுவிற்கு இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ருவான் ரூபசேனவும் தலைமை தாங்கினர்.

இவர்கள் கூட்டத்திற்கு இணைத் தலைவர்களாகச் செயற்பட்டனர்.

செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், திறன் மேம்பாட்டு முயற்சிகள், தொழில்முறை பயிற்சி, மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தக் கூட்டம் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு, கடல்சார் மாசு சம்பவங்களுக்கான தயார்நிலை மற்றும் எதிர்வினை நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பு நடைமுறைகளை தரப்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.

இரு கடலோரக் காவல்படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான அனுபவங்களையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் பரிமாறிக் கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இந்த உயர்மட்டக் கூட்டம், இரு கடலோரக் காவல்படை அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ், ஆண்டுதோறும் இந்தியா மற்றும் இலங்கையில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு இருதரப்பு நிகழ்வாகும்.

இதன் 7-வது கூட்டம் 2024-ல் கொழும்பிலும், 8-வது கூட்டம் 2025-ல் புது டெல்லியிலும் நடைபெற்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை