இலங்கை செய்தி

இன்று போராட்டத்தில் குதிக்கிறது மக்கள் போராட்ட முன்னணி

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (04) நண்பகல் 12 மணிக்கு போராட்டமொன்றையும் மேற்படி முன்னணி நடத்தவுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இது தொடர்பான அறிவிப்பை மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியன ஆபத்தானவை. எனவே, இச்சட்டமூலங்கள் திருத்தங்களுடன்கூட கொண்டுவரப்படக்கூடாது. அரசாங்கம் அவற்றை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்.

இதனை வலியுறுத்தி இன்று (4) நாம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு வருகின்றோம். இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

மக்கள் போராட்டத்தின் மூலமே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதை மறந்துவிடக்கூடாது” என்றார் வசந்த முதலிகே.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை