ஜெர்மனியில் பாடசாலையொன்றில் வெடிவிபத்து – 10 மாணவர்கள் காயம்
ஜெர்மனியின் ஓபர்ஹவுசன் (Oberhausen) நகரிலுள்ள ஒஸ்டர்ஃபெல்ட் (Osterfeld) பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பாடசாலையில் நேற்று திடீரென வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 மற்றும் 11 வயதுடைய ஐந்து மாணவர்களுக்கு தலை மற்றம் காது வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று சுமார் 9.40 மணியளவில், பாடசாலையின் விளையாட்டு உடை மாற்றும் அறைக்குள் பட்டாசு ஒன்று வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே இந்த வெடிப்ப சம்பவம் நிகழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




