அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி யாப்பில் விரைவில் திருத்தம்! சாமரவுக்கு புதிய பதவி!

  • December 15, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பை மறுசீரமைப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள் கட்சி ஜனநாயகத்தை […]

உலகம்

கொலம்பியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பலர் பலி!

  • December 15, 2025
  • 0 Comments

வடக்கு கொலம்பியாவின் கிராமப்புறப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாறையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக துணை ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் (Andres Julian)  உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். கரீபியன் நகரமான டோலுவிலிருந்து (Tolu ) மெடலினுக்குப் (Medellin) பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த விசாரணைகள் […]

இலங்கை

பயண அட்டை – பாடசாலை மாணவர்களுக்கு விசேட சலுகை!

  • December 15, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய அறிவிப்பை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார். இதேவேளை பேரிடரால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுக்க நிதி திரட்டும் நோக்கில் ஆசிரியர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக துணை அமைச்சர் மஹிந்த […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் உதவி கோருகிறார் சஜித்!

  • December 15, 2025
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி Takafumi Kadono ஐ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. “இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. அவ்வேளை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு உதவி […]

ஐரோப்பா

பிரித்தானியா : MI6 உளவுத்துறை தலைவரின் முதலாவது உரை – மக்களின் எதிர்பார்ப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் MI6 உளவுத்துறை தலைவரான பிளேஸ் மெட்ரெவெலி (Blaise Metreweli) தனது முதலாவது உரையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பில் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராகப் பொறுப்பேற்ற மெட்ரெவேலி ( Metreweli) பிரிட்டனின் வெளிநாட்டு உளவு நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி ஆவார். அவர் இன்று தனது முதலாவது உரையை நிகழ்த்தவுள்ளார். இதன்போது ரஷ்ய பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சைபர் தாக்குதல்கள் உள்பட ட்ரோன் ஊடுருவல்கள் வரை பலவற்றை எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது. […]

உலகம்

சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜிம்மி லாய் குற்றவாளி என அறிவிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைய ஜிம்மி லாயை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சதி செய்ததாகக் கூறி, ஹாங்காங்கின் உயர் நீதிமன்றம் இன்று  இந்த தீர்ப்பை வழங்கியது. இதற்கமைய அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹாங்காங் நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மை குறித்தும் விமர்சகர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது.    

செய்தி

உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பு சர்வதேச கொடையாளர் மாநாடு!

  • December 15, 2025
  • 0 Comments

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றதென அறியமுடிகின்றது. பேரிடர் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் மீண்டெழுதல் உள்ளிட்ட விடயங்களுக்காகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், அது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாடு நடத்தப்படும் என தெரியவருகின்றது. சர்வதேச கொடையாளர் மாநாட்டை […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் குளிரான வானிலை – விமான சேவைகள் பாதிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் குளிர்கால வானிலை காரணமாக முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்திற்கு நேற்றில் இருந்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களிலும், பிலடெல்பியா (Philadelphia) சர்வதேச விமான நிலையத்திலும் தரைவழி நிறுத்தங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. JFKவிற்கு வருகை தந்த 1000இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையம் 700க்கும் மேற்பட்ட விமான தாமதங்களை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமும் கணிசமான தரைவழி […]

இலங்கை செய்தி

183 பேரை காணவில்லை: 6,176 வீடுகள் முழுமையாக சேதம்!

  • December 15, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (15) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 183 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 176 வீடுகள் முழமையாகவும், 95 ஆயிரத்து 213 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து […]

ஆஸ்திரேலியா செய்தி

சிட்னி பயங்கரவாத தாக்குதல்: விசாரணைக்கு FBI யும் ஒத்துழைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்கா எப்.பி.ஐ. இயக்குநர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவால் கோரப்பட்ட உதவிகளை வழங்குவோம். எங்களால் முடிந்தவரை கூடுதல் தகவல்களை வழங்குவதற்கு முயற்சிப்போம் எனவும் அவர் கூறினார். அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தை அடுத்து இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரை, ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் தொடர்பு கொண்டு விளக்கியுள்ளார். மேலும் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணத்தையும் […]

error: Content is protected !!