இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போன்ற அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் இதுவரையில் உங்களது அனைத்துத் தொடர்புகளுடனும் பகிரப்படும் வகையில் இருந்தன. ஆனால், விரைவில் இன்ஸ்டாகிராமின் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் அம்சத்தைப் போல, தேர்ந்தெடுக்கப்பட்ட நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே பகிரும் வாய்ப்பை வாட்ஸ்அப்பும் வழங்க இருக்கிறது. மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட்டில் இருந்து கடன் வாங்கிய பல அம்சங்களை முன்பே அறிமுகப்படுத்தி இருந்தது. இப்போது, புதிய க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் அப்டேட்டும் அந்த வரிசையில் இணையவிருக்கிறது. சமீபத்திய ஐஓஎஸ் பீட்டா பதிப்பு 25.23.10.80-ல் இந்த அம்சம் […]













