இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை

  • September 15, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா, மத்திய […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

எலும்பு முறிந்தால் 3 நிமிடத்தில் ஒட்டும் அதிசய பசை – மருத்துவ உலகில் சாதனை படைத்த சீனா

  • September 15, 2025
  • 0 Comments

சீன மருத்துவர்களால் வெறும் 3 நிமிடங்களில் உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் புதிய பசை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சர் ரன் ரன் ஷா மருத்துவமனை மருத்துவர்களால் இந்த பசை கண்டுடிிகக்ப்பட்டுள்ளது. ‘போன் 02’ எனப் பெயரிடப்பட்ட இந்த மருத்துவ பசையை, எலும்பியல் நிபுணர் லின் சியான்பெங் தலைமையிலான குழு உருவாக்கியது. கடலடியில் சிப்பிகள் ஒட்டும் இயற்கை முறைதான் இவர்களின் இந்த கண்டுபிடிப்பின் முக்கிய விடயமாக அமைந்துள்ளது. இந்த பசை, இரத்தம் நிறைந்த சூழலிலும் […]

செய்தி மத்திய கிழக்கு

தாக்குதல் தீவிரம் – காஸா சிட்டியை விட்டு வெளியேறிய 250,000 பேர்

  • September 15, 2025
  • 0 Comments

தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் காஸா சிட்டியை விட்டு சுமார் 250,000 பேர் வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காஸா சிட்டி மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து அவ்வாறு நடந்திருப்பதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காஸா வட்டாரத்தின் மிகப்பெரிய நகரான காஸா சிட்டியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சுமார் 1 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிடுகிறது. காஸாவின் குடிமை பாதுகாப்பு பிரிவு தொடர் விமான தாக்குதல்களைப் பற்றி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேற்குப் […]

வட அமெரிக்கா

போலந்துக்குள் நுழைந்த ரஷ்யாவின் ட்ரோன்கள் – பாதுகாக்க விரையும் உலக நாடுகள்

  • September 15, 2025
  • 0 Comments

போலந்துக்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் நுழைந்த பிறகு நேட்டோ பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்தும் செக் குடியரசும் பாதுகாப்பிற்கு உதவுவதாக தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 3 போர் விமானங்களை அனுப்பி போலந்து வான்வெளியைக் காக்கப் போவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார். பிரான்ஸும் பிரித்தானியாவும் நேட்டோவின் கிழக்குப் பகுதிக்குப் போர் விமானங்களை அனுப்புவது பற்றியும் யோசிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கசப்பை வெளியிட்டார். ஆனால் அதைப் பெரிதுபடுத்த அவர் விரும்பவில்லை. முன்னதாக ரஷ்யாவின் சுமார் 20 […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

காஸா தாக்குதலில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! ஒப்புக் கொண்ட இஸ்ரேல் முப்படை தளபதி

  • September 15, 2025
  • 0 Comments

இதுவரை காஸா மீது நடத்திய போர் நடவடிக்கைகளில், தாம் சர்வதேச சட்டங்களை பின்பற்றவில்லை என இஸ்ரேல் முப்படை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார். “காஸாவில் 22 லட்சம் மக்களில் 10 சதவீதத்துக்கும் மேல் பேர் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ளனர். இது ஒரு நாகரிகமான போர் அல்ல. யாரும் நீதியை கருத்தில் கொள்ளவில்லை. மேலும், தனது நடவடிக்கைகளை இராணுவ சட்ட ஆலோசகர் யிபாத் தோமா-யெருஷலாமி உள்ளிட்டோர் கட்டுப்படுத்தவில்லை. இதனால், இஸ்ரேல் .ராணுவ சட்ட ஆலோசகர்கள் வெறும் ஆலோசனை வழங்குபவர்களாக மட்டுமே உள்ளனர்” […]

ஆப்பிரிக்கா செய்தி

புதிய பிரதமர் மற்றும் எரிசக்தி அமைச்சரை நியமித்த அல்ஜீரிய ஜனாதிபதி

  • September 14, 2025
  • 0 Comments

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபவுன், அமைச்சரவை மறுசீரமைப்பில், நாட்டின் புதிய பிரதமராக சிஃபி கிரிப்பையும், எரிசக்தி அமைச்சராக மௌரத் அட்ஜலையும் நியமித்துள்ளார். கடந்த மாதம் டெப்பவுன் நாதிர் லார்பாவின் பதவிக்காலம் முடிவடைந்ததில் இருந்து தொழில்துறை அமைச்சராக இருந்த சிஃபி கிரிப், தற்காலிக பிரதமராகப் பணியாற்றி வந்தார். அல்ஜீரியாவின் அரசு மின்சார நிறுவனமான சோனெல்காஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக மௌரத் அட்ஜல் இருந்தார். நிதி, வர்த்தகம் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் மேலும் தொடர்வதாக ஜனாதிபதி அலுவலகம் […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தால் கைவிடப்பட்ட ஸ்பெயின் சைக்கிள் ஓட்ட போட்டி

  • September 14, 2025
  • 0 Comments

மாட்ரிட்டில் நடந்த பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக Vuelta a Espana சைக்கிள் ஓட்டப் பந்தயத்தின் இறுதி போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதனால் டேனிஷ் வீரர் ஜோனாஸ் விங்கேகார்ட் ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஸ்பானிஷ் தலைநகரில் உள்ள பந்தயப் பாதையின் சில பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததனால் போட்டி கைவிடப்பட்டது. மாட்ரிட்டின் வீதிகளில் 100,000 பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் திரண்டனர் குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியன் ரிக்கி ஹாட்டன் 46 வயதில் காலமானார்

  • September 14, 2025
  • 0 Comments

முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியனான ரிக்கி ஹேட்டன் 46 வயதில் இறந்துவிட்டார் என்பதை பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்களால் “தி ஹிட்மேன்” என்று அறியப்பட்ட ஹேட்டன், மான்செஸ்டருக்கு அருகிலுள்ள ஹைடில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். மான்செஸ்டரில் பிறந்த இந்த குத்துச்சண்டை வீரர் பிரிட்டனின் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரானார், லைட்-வெல்டர்வெயிட் மற்றும் வெல்டர்வெயிட் போட்டிகளில் உலக பட்டங்களை வென்றார். 15 ஆண்டுகால தொழில்முறை வாழ்க்கையில், 2012 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு […]

உலகம் செய்தி

லண்டனில் நடந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு எலான் மஸ்க் ஆதரவு

  • September 14, 2025
  • 0 Comments

பிரித்தானியா தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்தனர். இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். […]

செய்தி வட அமெரிக்கா

3 நாள் பயணமாக பிரித்தானியா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி

  • September 14, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் பயணமாக 16ம் திகதி பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் பிரித்தானியா மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்க உள்ளார். பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.