மொசாம்பிக்கில் படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
மத்திய மொசாம்பிக்கில் (Mozambique) உள்ள பெய்ரா (Beira) துறைமுகக் கடற்கரையில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். கடலில் நங்கூரமிடப்பட்ட ஒரு கப்பலுக்கு பணியாளர்களை மாற்றும் வழக்கமான நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக சில இந்தியர்கள் இறந்துவிட்டனர், மேலும் சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மொசாம்பிக்கில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு […]













