ட்ரம்பின் பால்ரூம்(ballroom) திட்டத்திற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி இடிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசையான அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு போல்ரூம் (ballroom) அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இது அவரின் கனவு என்பதோடு நீண்ட நாள் விருப்பம் ஆகும். […]












