நுவரெலியா – சீதையம்மன் ஆலயத்தில் சீ.சீ.டி.வி கெமராக்களை உடைத்து கொள்ளை!
நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் உடைக்கப்பட்டு, இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆலயத்தின் உட் பகுதியில் பல்வேறு தேவைகள் நிமித்தமாக வைக்கப்பட்டிருந்த ஏழு உண்டியல்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்து குறித்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த […]













