உலகம் செய்தி

உதய்பூரில் நடைபெறும் திருமணத்திற்காக இந்தியா வரும் டொனால்ட் டிரம்பின் மகன்

  • November 19, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்(Donald Trump Jr) இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூரில்(Udaipur) நடைபெறும் இந்திய அமெரிக்க தம்பதியினரின் உயர்மட்ட திருமணத்தில் டிரம்ப் ஜூனியர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை முன்னிட்டு, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் குழு ஏற்கனவே உதய்பூருக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 மற்றும் 22 […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி

  • November 19, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் ஹமிர்பூரில்(Hamirpur) மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீ ராம் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டி அவரை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், […]

பொழுதுபோக்கு

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் சின்மயி…

  • November 19, 2025
  • 0 Comments

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசி குமார் நடித்த “மை லார்ட்” எனும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் “எச காத்தா” எனும் முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய நிலையில், பாடகி […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

டெக்சாஸில் இரண்டு முஸ்லிம் உரிமைக் குழுக்கள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிப்பு

  • November 19, 2025
  • 0 Comments

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டெக்சாஸ்(Texas) ஆளுநர் கிரெக் அபோட்(Greg Abbott), அமெரிக்காவின் இரண்டு முஸ்லிம் குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார். பிரபல முஸ்லீம் குழுக்களான அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில்(CAIR) மற்றும் முஸ்லிம் சகோதரத்துவம்(Muslim Brotherhood) ஆகியவை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 30 அலுவலகங்களைக் கொண்ட வாஷிங்டனை(Washington) தளமாகக் கொண்ட CAIR, 1990களின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கான சிவில் உரிமைகளுக்காக போராடி வருகிறது, மேலும் காசா மோதலில் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக விமர்சித்து […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

  • November 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபலமான ஆஷஸ்(Ashes) தொடர் 21ம் திகதி ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுநாள் பெர்த்(Perth) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அணி விபரம்: பென் டக்கெட்(Ben Duckett), ஜாக் கிராலி(ack Crawley), ஓலி போப்(Ollie Pope), ஜோ ரூட்(Joe Root), ஹாரி புரூக்(Harry Brook), பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes), […]

உலகம்

தென்கொரியாவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பல் !

  • November 19, 2025
  • 0 Comments

தென்கொரியாவில் ஏறக்குறைய 270 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று பாறைகளில் மோதி இன்று விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பல் நாட்டின் தெற்கு தீவான ஜெஜுவிலிருந்து (Jeju) தென்மேற்கு துறைமுக நகரமான மோக்போவுக்குப் (Mokpo) பயணித்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக  கடலோர காவல்படையினர்  அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். கப்பலில் இருந்தவர்களை மீட்க அனைத்து வசதிகளையும் திரட்டி வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

உலகம்

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 64 பேர் மாயம்!

  • November 19, 2025
  • 0 Comments

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். கசாய் (Kasai) மாகாணத்தில் உள்ள சங்குரு (Sankuru) ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த திங்கட்கிழமை  இந்த விபத்து  நிகழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். படகில் 120 பேர் இருந்ததாகவும், அவர்களில் 54 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 64 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் மலிவான அல்லது தரம் குறைந்த படகுகளை […]

பொழுதுபோக்கு

பதறிப்போன நடிகை மான்யா ஆனந்த்…. என்ன செய்தார் தெரியுமா?

  • November 19, 2025
  • 0 Comments

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் கூறிய தகவல் தான் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பேட்டி தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை கவனித்த மான்யா ஆனந்த், உடனே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், “என்னைப் பற்றிய பேட்டியைத் தொடர்ந்து சில சேனல்கள் தனுஷ் சாரை குறைசொல்லும் விதமாக போலித் தகவல்களை பரப்பு வருகிறார்கள். நான் பேட்டியில் தெளிவாக ‘என்னை தொடர்பு கொண்ட நபர் ஒரு போலி நபராக இருக்கலாம்’ என்று சொல்லியிருந்தேன். […]

இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்!

  • November 19, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று சட்டமா அதிபர்  கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் தெரிவித்தார். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நேற்று அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான கூடுதல் […]

உலகம்

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை – மக்களுக்கு எச்சரிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை இன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் 54,000 அடி உயர சாம்பல் காற்றில் கலந்துள்ள நிலையில், மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அபாயங்களைத் தவிர்க்க எரிமலையிலிருந்து  தூர இடைவெளியை பராமரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தோனேசியாவில் செயலில் உள்ள எரிமலைகளில் செமேரு (Semeru) எரிமலையும் ஒன்றாகும்.