பொழுதுபோக்கு

விண்ணைத்தாண்டி வருவாயா காட்சிகளை பயன்படுத்த தடை

  • November 19, 2025
  • 0 Comments

விண்ணைத்தாண்டி வருவாயா  படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை சமீபத்தில் வெளியான “ஆரோமலே” படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டி.ராஜீவ் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் இசையைப் பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு முரணானது என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு மினி ஸ்டுடியோ […]

ஐரோப்பா

மாறும் வானிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

பிரித்தானியா  முழுவதும் குளிர்காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் (Wales)மற்றும் ஸ்காட்லாந்தின் (Scotland)  சில பகுதிகளில் 7 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வடக்கு அயர்லாந்து ( Northern Ireland), வேல்ஸின் (Wales)  சில பகுதிகள், வடக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின்  (Scotland) பெரும்பகுதிக்கு பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வடகிழக்கு இங்கிலாந்திற்கு  அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் உயரமான பகுதிகளில் 15-20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும் […]

இலங்கை

பழைய முறைமையில் தேர்தலை நடத்த தமிழரசுக் கட்சியும் பச்சைக்கொடி!

  • November 19, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு அரசமைப்பில் மாகாணசபை முறைமை உள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” எனவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டார். அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் […]

ஐரோப்பா செய்தி

சட்டவிரோத இடப்பெயர்வை கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை கையில் எடுத்த பிரான்ஸ்!

  • November 19, 2025
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் கைது வலைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. 30 மீட்டர் அகலம் கொண்ட இந்த வலைகள், படகு ஓட்டுநர்களைத் தடுக்கவும், அவற்றின் பாதையை சீர்குலைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பீதியை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் எனவும்  பிரெஞ்சு கடலோரக் காவல்படையினரும் தொழிற்சங்கங்களும் எச்சரித்துள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளால் அதிகாரிகள் குற்றவியல் வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் வழக்குறைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் சட்டவிரோத இடப் பெயர்வை […]

இலங்கை

திருமலை சம்பவம்: பொலிஸாரை இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்து!

  • November 19, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்துவிட்டே, அச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல மேலும் கூறியவை வருமாறு, நான் இனவாதி அல்லன். எனினும், திருகோணமலை சம்பவம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரப்படும் என ஜனாதிபதி நேற்று கூறி இருந்தார். […]

உலகம்

சிலியில் கடுமையான பனிப்புயல் – 05 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

  • November 19, 2025
  • 0 Comments

சிலியில் (Chile)  கடுமையான பனிப்புயலில் சிக்கி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 05 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோரஸ் டெல் பெய்ன் (Torres del Paine ) தேசிய பூங்காவில் இருந்து நேற்று குறித்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பிரித்தானிய பெண் ஒருவர், இரண்டு ஜெர்மன் குடிமக்கள் மற்றும் இரண்டு மெக்சிகன் குடிமக்கள் ஆகியோரின் உடல்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ஃபோன்ட் (Gabriel Boric Font) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த […]

ஐரோப்பா

உக்ரைனின் (Ukraine) அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – 10 பேர் பலி!

  • November 19, 2025
  • 0 Comments

உக்ரைன் (Ukraine) முழுவதும் நேற்று இரவு ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12  குழந்தைகள் உள்பட 37 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வோரோனெஷில் (Voronezh) உக்ரைன் நான்கு ATACMS ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் […]

இலங்கை செய்தி

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தமிழரசு கட்சியினர்!

  • November 19, 2025
  • 0 Comments

அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவிடம் தமிழரசு கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் அவர்கள் இதனை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மாகாண சபைத் தேர்தல்கள், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். தமிழரசு கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சிறப்பு சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பா

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமா?

  • November 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கமானது  கடந்த செப்டம்பர் மாதம் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. எரிசக்தி விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் உணவு விலை பணவீக்கத்தில் ஏற்பட்ட மந்த நிலையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பணவீக்க நிலையை வரவேற்றுள்ள நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் விலைகளைக் குறைக்க இன்னும் அதிகமாகச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து வருவதால் டிசம்பர் மாதத்தில் […]

பொழுதுபோக்கு

46 வயதில் முதல் குழந்தைக்கு “அப்பா”வாகினார் பிரேம்ஜி

  • November 19, 2025
  • 0 Comments

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், நகைச்சுவை என பல துறைகளில் கலக்கிக்கொண்டு முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி அப்பாவாகிவிட்டார். கடந்த ஆண்டு இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மனைவி கர்ப்பமானார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் வளைகாப்பு பங்க்‌ஷனை கிராண்ட் ஆக நடத்தி இருந்தார் பிரேம்ஜி. இந்த நிலையில், இன்று பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். 46 வயதில் […]