டித்வா புயலின் கோரம் – 390 பேர் மரணம்
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 382,651 குடும்பங்களைச் சேர்ந்த 13,373,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.













