இலங்கை செய்தி

இலங்கையில் மேலும் 3 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(5) உட்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்த மூன்று கட்சிகளுக்கான அங்கீகாரம், ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எமது மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியனவே, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகும்.

இந்த மூன்று கட்சிகளும் குறித்த சட்ட விதிகளுக்கு அமைவாக, தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகக் கருதப்படத் தகுதியுடையவை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க, அறிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை